/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐய்யனாரப்பன் கோவிலில் குதிரை விடுதல் நிகழ்ச்சி
/
ஐய்யனாரப்பன் கோவிலில் குதிரை விடுதல் நிகழ்ச்சி
ADDED : ஜூன் 18, 2025 04:55 AM

புதுச்சேரி: நூறாண்டு பழமை வாய்ந்த லாஸ்பேட்டை ஜய்யனாரப்பன் கோவிலில் பக்தர்களின் நேர்த்திக் கடனுக்காக குதிரை விடுதல் நிகழ்ச்சி நடந்தது.
லாஸ்பேட்டை -கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள ஐய்யனாரப்பன் கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 2ம்தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குதிரை விடுதல் நிகழ்ச்சிக்காக நான்கடி நீளம் கொண்ட, ஜய்யனார் வீற்றிருக்கும் 16 மண் குதிரைகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக கோவிலின் மாட வீதிகளில் வலம் வந்து, கோவிலில் நிறுத்தப்பட்டது.
பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக குதிரை சிலைகளை வாங்கி கோயில் வளாகத்தில் வைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று காலை ஊரணி பொங்கல் வைத்து, பின்னர் கோவில் தலவிருட்சமாக உள்ள வீரு மரத்தின் இலைகளை பறித்து தங்களின் பிரார்த்தனைகளை வேண்டிக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். குதிரை விடுதல் நேர்த்தி கடன் நிகழ்ச்சி 100 ஆண்டுகளாக நடந்து வருகிறது என பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.