/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்கத்தொகை பட்டியல் வெளியீடு
/
தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்கத்தொகை பட்டியல் வெளியீடு
தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்கத்தொகை பட்டியல் வெளியீடு
தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்கத்தொகை பட்டியல் வெளியீடு
ADDED : டிச 19, 2025 05:22 AM
புதுச்சேரி: தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை இணை வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், 2025--26ம் ஆண்டிற்கான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன்படி மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 7 ஆயிரம், தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் வயல் ஆய்வு செய்யப்பட்டு, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக புதுச்சேரி உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் இன்று 19ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையதளத்திலும் https://agri.py.gov.in வெளியிடப் பட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், வரும் 29ம் தேதிக்குள் தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை), அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

