/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோட்டக்கலை தொழில்நுட்ப செயல்விளக்க நிகழ்ச்சி
/
தோட்டக்கலை தொழில்நுட்ப செயல்விளக்க நிகழ்ச்சி
ADDED : டிச 13, 2024 06:25 AM

புதுச்சேரி: நத்தமேடு கிராமத்தில் தோட்டக்கலை துறையின் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது, தொழில் நுட்பங்களை எவ்வாறு கையளவு குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் செல்வமுத்து வரவேற்றார்.
காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் அக்ஷயா, டெல்னா ஜார்ஜ், ஹிருதிய திலககுமார், ஜெய்நிதா, ஸ்ரீபிரியங்கா, தனுஸ்ரீ, தனுஷ்யா, வம்ஷிகா, வென்சியா, இவாஞ்சலின், யாமினி ஆகியோர் குழித்தட்டு நாற்றங்கால் பயன்படுத்தும் முறை, தாழ்கூறை மற்றும் உயர்கூறை தோட்டக்கலை, சுற்றுச்சூழல் நட்பு குளிர்சாதன பெட்டி , நீரியல் வளர்ப்பு மற்றும் தழைக்கூளம் அல்லது மூடாக்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் 25க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

