ADDED : ஜூலை 01, 2026 06:17 AM

புதுச்சேரி: உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரெட் ரிப்பன் கிளப் மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து தொடர்கல்வி மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரத்த வங்கி, நோயியல் துறை மற்றும் சமூக மருத்துவ துறையின் ரெட் ரிப்பன் கிளப் இணைந்து மனிதநேயத்தின் ஒரு துளி ரத்தம் தானம் செய்யுங்கள் உயிர்களை காப்பாற்றுங்கள்' என்ற கருத்தரங்கம் கல்லுாரியில் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன், கல்வி நிறுவன பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குநர் காக்னே, டீன் (கல்வி) கார்த்திகேயன், டீன் (ஆராய்ச்சி) சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள், 100 மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப மாணவர்கள், 50 செவிலியர்கள்என 300 பேர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் அமர்வுகளில் டாக்டர் டயானா ஷர்மிளா நாதன் ஒரே ஒரு யூனிட் ரத்தம் மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றும் என்பதை விளக்கி, அனைவரும் தொடர்ந்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். பேராசிரியர் உதயசங்கர்.
ஜிப்மர் மருத்துவமனை பேராசிரியர் அபிஷேக் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ரத்த தானம் செய்தவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
ஏற்பாடுகளை ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரீனா மோகன், நோயியல் துறை பேராசிரியர் எர்லி அமெல் இவான், சமூக மருத்துவத் துறை பேராசிரியர் பிரேமானந்த், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.
