தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்


UPDATED : அக் 12, 2026 03:36 AM

ADDED : அக் 12, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 03:36 AM ADDED : அக் 12, 2026 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தாக அவர் அளிக்கும் பேட்டி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் மதன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தனது காரை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு, உள்ளே வந்து உணவு கேட்டனர். அப்போது மதன், கார் சாலையின் நடுவே நிற்பதால் போக்குவரத்து பாதிக்கும்; காரை ஓரம் நிறுத்தும்படி கூறியுள்ளார்.

மேலும் தற்போது, ஓட்டல் மூடும் நேரம் என்பதால், உணவு ஏதுவும் இல்லை என, கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த கும்பல், பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த பெண் ஒருவரை அங்கு வரவழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்த பெரிய கடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தகராறில் ஈடுபட்ட கும்பலை அங்கிருந்து களைந்து போக செய்தனர்.

இருப்பினும், அந்த கும்பல் ஓட்டல் உரிமையாளர் மதன் வீட்டிற்கு சென்று அவரை மொபைலில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து மதன் பெரிய கடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்ந்து மதன் அளித்த பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us