தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான 3ம் சுற்று வரைவு ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான 3ம் சுற்று வரைவு ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான 3ம் சுற்று வரைவு ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு


UPDATED : அக் 12, 2026 01:41 AM

ADDED : அக் 12, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 01:41 AM ADDED : அக் 12, 2026 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம் மற்றும் கால்நடை அறிவியல் போன்ற நீட் மதிப்பெண் அடிப்படையிலான தொழில்முறைப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கணினி கலந்தாய்வு நடத்தி வரைவு இட ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.

அரசு ஒதுக்கீடு, மேலாண்மை ஒதுக்கீடு, தெலுங்கு சிறுபான்மையினர் மேலாண்மை ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் என்று அடிப்படையில் பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியலை www.centacpuducherry.in இணையத்தில் பார்வையிடலாம்.

எம்.பி.பி.எஸ்.: மொத்தம் உள்ள 1,285 மருத்துவ இடங்களில், இந்த மூன்றாம் சுற்றில் 1,196 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பிரிவுகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 429 இடங்களும் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், மேலாண்மை ஒதுக்கீட்டில் உள்ள 427 இடங்களில் 407 இடங்களும், தெலுங்கு சிறுபான்மையினர் மேலாண்மை ஒதுக்கீட்டில் உள்ள 4 இடங்களும், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் உள்ள 43 இடங்களும் ஒதுக்கீடு பெற்றுள்ளன.

பல் மருத்துவம்:: பி.டி.எஸ்., படிப்பைப் பொறுத்தவரை, அரசு ஒதுக்கீட்டில் உள்ள 121 இடங்களில் 120 இடங்களும், மேலாண்மை ஒதுக்கீட்டில் உள்ள 185 இடங்களில் 129 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம்:: இப்படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 44 இடங்களில் 32 இடங்களும், கால்நடை மருத்துவப் படிப்பில் மேலாண்மை–சுயநிதி பிரிவில் உள்ள 30 இடங்களும், என்.ஆர்.ஐ பிரிவில் உள்ள 2 இடங்களும் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வரைவுப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது குறைகள் இருந்தால் இன்று காலை 11 மணிக்குள் தங்களது லாகின் டேஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி தெரிவிக்கலாம். மாணவர்களின் குறைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்பட்ட பின், மூன்றாம் சுற்றின் தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும் என சென்டாக் தெரிவித்துள்ளது.

தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டதும், லாகின் டேஷ்போர்டு மூலமாகத் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்த பிறகே மாணவர்கள் ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளை அணுக வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகவல்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது சென்டாக் உதவி எண்களான 0413-2655570, 2655571 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us