ADDED : ஏப் 13, 2026 04:15 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, 45 அடி சாலை, வெங்கடேஸ்வரா நகர், கிழக்கு சாரம் அருகே ஓட்டல் எஸ்.வி.ஆர். கிராண்ட் திறப்பு விழா நேற்று நடந்தது.
ஓட்டலை ஸ்ரீலட்சுமி காபி ஒர்க்ஸ் உரிமையாளர் மணி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். விழாவில், மாலா ஜூவல்லரி தர்மராஜ் ஜெயின் காமதேனு ஜூவல்லரி ஷிகாகர் சந்த், பிரியன் காஸ் ஏஜென்சி அய்யப்பன், கணேஷ் ஜூவல்லரி கணேஷ், ஸ்ரீலஷ்மி காபி திருவண்ணாமலை நாகராஜன் மற்றும் அனைத்து விற்பனையாளர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவிற்கு வந்தவர்களை ஓட்டல் உரிமையாளர் ராஜேஷ் - தேவி மற்றும் குடும்பத்தினர் வர வேற்று, நன்றி கூறினர்.
