/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி
/
மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி
ADDED : பிப் 17, 2025 05:52 AM
நெட்டப்பாக்கம்; பண்டசோழநல்லுார் மனமகிழ் மன்றம் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லுார் கிராமத்தில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், பல லட்சம் செலவில் மனமகிழ் மன்றம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இந்த மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படமால் இருந்து வந்தது.
இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுப்பாட்டில் இருந்த மனமகிழ் மன்றம், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒப்படைப்பதற்கான ஆணையினை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.
நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு முன்னிலையில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திக்கேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷிடம் ஒப்படைத்தார்.
இதன் மூலம் விரைவில் பண்டசோழநல்லுாரில் மனமகிழ் மன்றம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.