/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டலில் வீட்டு உபயோக சிலிண்டர்; உரிமையாளர் மீது வழக்கு
/
ஓட்டலில் வீட்டு உபயோக சிலிண்டர்; உரிமையாளர் மீது வழக்கு
ஓட்டலில் வீட்டு உபயோக சிலிண்டர்; உரிமையாளர் மீது வழக்கு
ஓட்டலில் வீட்டு உபயோக சிலிண்டர்; உரிமையாளர் மீது வழக்கு
ADDED : அக் 14, 2024 08:15 AM
புதுச்சேரி : வீட்டு உபயோக சிலிண்டரை ஓட்டலில் பயன்படுத்திய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குயவர்பாளையம் லெனின் வீதியில் ஒரு ஓட்டலில் வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டர் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டலில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வீட்டு உபயோக சிலிண்டர் ஓட்டலுக்கு பயன்படுத்தி வருவது தெரியவந்தது. சிலிண்டரை பறிமுதல் செய்த போலீசார் உரிமையாளர் அருண் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.