/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா புழக்கத்தை தடுப்பது எப்படி? போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
/
கஞ்சா புழக்கத்தை தடுப்பது எப்படி? போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
கஞ்சா புழக்கத்தை தடுப்பது எப்படி? போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
கஞ்சா புழக்கத்தை தடுப்பது எப்படி? போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஜன 10, 2025 06:00 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை தடுப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் நடந்தது.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமை தாங்கி, பேசுகையில், 'நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நடக்கும் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும். கஞ்சா வியாபாரிகள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வருகின்றனர். அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
கூட்டத்தில் எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், வம்சிதரெட்டி, ரகுநாயகம், பக்தவச்சலம் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.