/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து குடோன்களுக்கு அனுமதி தந்தது எப்படி? அனைத்து துறைகளுக்கும் கிடுக்கிபிடி
/
போலி மருந்து குடோன்களுக்கு அனுமதி தந்தது எப்படி? அனைத்து துறைகளுக்கும் கிடுக்கிபிடி
போலி மருந்து குடோன்களுக்கு அனுமதி தந்தது எப்படி? அனைத்து துறைகளுக்கும் கிடுக்கிபிடி
போலி மருந்து குடோன்களுக்கு அனுமதி தந்தது எப்படி? அனைத்து துறைகளுக்கும் கிடுக்கிபிடி
ADDED : டிச 11, 2025 05:04 AM
புதுச்சேரி: போலி மருந்து விவகாரம் புதுச்சேரியில் பூதாகரமாகியுள்ள நிலையில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிரடியாக அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
புதுச்சேரியில் போலி மருந்துகளை தயாரித்து விற்ற மாபியா கும்பல் சிக்கியது. முக்கிய குற்றவாளியான ராஜா நேற்று கோர்ட்டில் சரணடைந்த நிலையில் மருந்து கட்டுப்பாட்டு துறை அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி தகவல்களை கேட்டுள்ளது.
போலி மருந்து விவகாரத்தில் மொத்தம் 13 நிறுவனங்களின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் 6 நிறுவனங்கள் லைசென்ஸ் வாங்கப்பட்ட இடத்தில் இயங்கியவை. மற்ற 7 இடங்களில் இருந்த மருந்து நிறுவனங்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்கியவை. இந்த குடோன்களுக்கு அரசு துறைகள் அனைத்தும் எந்த மாதிரியான அனுமதி வழங்கியது என்ற விபரத்தை உடனடியாக தெரிவிக்க கோரியுள்ளது.
என்ன காரணம் போலி மருந்து குடோன்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வாடகைக்கு எடுத்து நடத்தப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களுக்கு நகராட்சி உரிமம், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, தீயணைப்பு துறை சான்றிதழ், தொழில் துறை அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக அனைத்து அரசு துறைகளுக்கும் மருந்து கட்டுப்பாட்டு துறை சுற்றிக்கை அனுப்பி, எதன் அடிப்படையில் குடோன்களுக்கு அனுமதி தரப்பட்டது, அதற்கான சான்றிதழ்களை உடனடியாக சமர்ப்பிக்க கோரியுள்ளது.
இதனால், இந்த போலி மருந்து விவகாரத்தில் எங்கே, தாங்களும் சிக்கிக் கொள்வோமோ என அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.

