ADDED : செப் 02, 2025 03:29 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் மாணவர்களுக்கான மனிதவள மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
பள்ளி முதல்வர் அர்பிதா தாஸ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தனபாக்கியம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தமிழரசி வரவேற்றார்.
வைத்தியநாதன்எம்.எல்.ஏ., பயிற்சி முகாமை துவக்கி வைத்து, மாணவர்கள் படிக்கும் போதே பல்வேறு திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
போட்டி மிகுந்த உலகில் கல்வி, அறிவு, ஒழுக்கம், உழைப்பு ஆகியவற்றில் குறிக்கோளாக இருந்து கவனம் சிதறாமல் படித்தால் அரசின் உயர் பதவிகளுக்கு செல்ல முடியும். போதைப்பழக்கம், சினிமா, ஆன்லைன் விளையாட்டுகள், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
இன்ஸ்பெக்டர் ரமேஷ், ' போதைப் பொருட்களால் தனி மனித வாழ்விலும், சமூகத்திலும் ஏற்படும் பாதிப்புகள், பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள்' குறித்தும், எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி 'மனித வளம் மற்றும் உயர் கல்வியிலுள்ள வாய்ப்புகள்' குறித்து பேசினர்.
விரிவுரையாளர் முகமது பாரூக் நன்றி கூறினார்.