/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல்லை பாலுவிற்கு மனிதநேய மாண்பாளர் விருது ; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

ADDED : அக் 26, 2024 10:27 AM

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை பாராட்டி புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மனிதநேய மாண்பாளர் விருதினை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இது பற்றிய விவரம் வருமாறு
அட்சய பாத்திரம் நெல்லை பாலு
மதுரையில் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கத்தில் இருந்து கடந்த 1250 நாட்களாக தினமும் 300 பேருக்கு மதிய உணவு அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் முயற்சியால் வழங்கப்பட்டு வருகிறது.
மனிதநேய மாண்பாளர் விருது
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா புதுச்சேரி சட்டசபைவளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனர் கலைமாமணி முனைவர் கோ.பாரதி முன்னிலை வகித்தார் .
முதல்வர் ரங்கசாமி
நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்று மதுரை அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூக பணியினை பாராட்டி மனிதநேய மாண்பாளர் விருது மற்றும் கேடயத்தை வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை செயலாளர் ஜெ.வள்ளி பங்கேற்றார்.