/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைப்பட்டா கேட்டு பட்டினி போராட்டம்
/
மனைப்பட்டா கேட்டு பட்டினி போராட்டம்
ADDED : ஜன 02, 2026 04:58 AM

புதுச்சேரி: சேதராப்பட்டு பழைய காலனி பகுதி மக்கள் மனைப்பட்டா வழங்கக் கோரி, தொடர் பட்டினி போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவியது.
ஊசுடு தொகுதி, சேதராப்பட்டு பழைய காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.
இதையடுத்து இப்பகுதி மக்கள் இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, அரசுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கி, பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சேதராப்பட்டு பழைய காலனி மக்கள் மனைப்பட்டா வழங்காத அரசை கண்டித்தும், உடனடியாக மனைப்பட்டா வழங்க வலியுறுத்தியும் நேற்று காலை முதல் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டடத்தில்100க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வராததால், தொடர்ந்து இரவு விறகு மூலம் தீ மூட்டி, போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

