ADDED : ஜூன் 24, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்,59; மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி செல்வி,50; குடும்ப பிரச்னையில் கடந்த 15ம் தேதி செல்வியை, ஜெயராமன் தேங்காய் திருவும் கட்டையால் தாக்கினார்.
அதில் தலையில் படுகாயமடைந்த செல்வி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் கடந்த 20ம் தேதி இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் கொலை வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த ஜெயராமனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.