/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
/
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
ADDED : மார் 02, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் முருகன், 44; இவரது மனைவி சத்யா, 36; இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, சத்யா குருமாம்பேட்டில் தான் வேலை செய்யும் கம்பெனி முன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன், தான் வைத்திருந்த சிறு கத்தியால் சத்யாவின் முதுகில் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்த சத்யா அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

