ADDED : மார் 21, 2026 07:04 PM
புதுச்சேரி: குடிக்க பணம் கேட்டு மனைவி மற்றும் மாமியாரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, வாணரப்பேட்டை பாடசாலை வீதியை சேர்ந்தவர் சாதீக்பாஷா மனைவி லட்சுமி (எ) பாத்திமாபீவி, 48. இவரது மகள் ஷமிதாவை, 25; வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ், 31; என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். சுபாஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
முத்தியால்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் இருந்த கணவர், மனைவிக்கும் இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதையடுத்து, ஷமிதா தனது கணவருடன் தனது தாய் வீடான வாண்ரப்பேட்டையில் வந்து தங்கியிருந்தனர். அப்போது, மனைவியிடம் குடுக்க பணம் கேட்டு சுபாஷ் தகராறு செய்தார். அதை தட்டி கேட்ட மாமியார் மற்றும் மனைவியிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, மாமியார் லட்சுமி கொடுத்து புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, சுபாைஷ நேற்று கைது செய்தனர்.
