நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் தர்மபுரம் கருவகுளம் பகுதியை சேர்ந்த ஹரிக்குமார்,32; இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் கொரோனா காலத்திற்கு பிறகு கிடைக்கும் வேலைகளை செய்துவந்தார்.
இந்நிலையில் ஹரிக்குமார் அடிக்கடி செல்போனில் பேசிவந்துள்ளார்.
இதை அவரது மனைவி கண்டித்தால் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஹரிக்குமாரை காணவில்லை. பின்னர் பல இடங்களில் தேடியபோது அவர் அருகில் உள்ள புளியமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

