தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை

முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை

முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை


ADDED : செப் 08, 2026 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கணவர் முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், மனமுடைந்த டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ் மகள் சிபானா பர்வீன், 26; பல் மருத்துவர். இவரும், விழுப்புரம் பட்டானுாரை சேர்ந்த நடராஜன் மகன் நாகலிங்கம் என்பவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

பெண் வீட்டார் 70 சவரன் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் சீர்வரிசை பொருட்களை நாகலிங்கத்திற்கு கொடுத்தனர். இந்நிலையில், நாகலிங்கம் அடிக்கடி காரைக்காலுக்கு சென்று வந்ததால், சந்தேகமடைந்த சிபானா பர்வீன் தனது கணவரிடம் கேட்டதற்கு, தொழில் தொடர்பாக சென்று வருவதாக கூறினார். அவரை பற்றி விசாரித்த போது, நாகலிங்கம், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இதனால், மனமுடைந்த சிபானா பர்வீன் தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அதிக அளவில் துாக்க மாத்திரை சாப்பிட்டு துாக்கினார். அவரது பெற்றோர் நேற்று காலை எழுப்பிய போது, அவர் சுயநினைவின்றி இருந்தார்.

உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது தந்தை அப்துல் அஜிஸ் புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us