ADDED : ஆக 22, 2026 08:51 PM
புதுச்சேரி: கணவரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்ற மனைவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை, அசோக் நகரை சேர்ந்தவர் மகேஷ், 53; என்.சி.சி., தலைமை அலுவலத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி. கணவன், மனைவி இடையே அடிக்கடி ஏற்படும் குடும்ப பிரச்னையில் கணவரிடம் கோபித்து கொண்டு, முத்துலட்சுமி வெளியில் சென்று வீட்டுக்கு வந்துவிடுவார்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி, வீட்டு குளியல் அறையில் மகேஷ் குளித்து கொண்டிருந்தபோது, அவரது மனைவி வீட்டு கதவை பூட்டி விட்டு வெளியில் சென்றார். வெளியில் வரமுடியாத மகேஷ், அக்கம் பக்கத்தினர் உதவியோடு, வீட்டில் இருந்து வெளியில் வந்தார். பின், பல இடங்களில் தேடியும் முத்துலட்சுமி கிடைக்கவில்லை.
இதுகுறித்து, புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
