தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை புதுச்சேரி ஒதுக்கீட்டில் 54 பேர் தேர்வு

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை புதுச்சேரி ஒதுக்கீட்டில் 54 பேர் தேர்வு

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை புதுச்சேரி ஒதுக்கீட்டில் 54 பேர் தேர்வு


ADDED : ஆக 22, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் 182 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளது. அதில், புதுச்சேரி மாணவர்களுக்கு 48 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடுக்கு 134 இடங்கள் ஒதுக்கப்படும். காரைக்கால் ஜிப்மர் கிளையில் உள்ள 61 இடங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு 16 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடாக 45  இடங்கள் ஒதுக்கப்படும்.

அதில், நீட் மதிப்பெண் அடிப்படையில், மத்திய மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு  நடத்தி, ஜிப்மர் இடங்களுக்கான முதல் சுற்று இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டது. இதில், புதுச்சேரி ஒதுக்கீட்டில் உள்ள 64  இடங்களுக்கு 54 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் 31ம் தேதிக்குள் ஜிப்மரில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us