ADDED : ஜன 14, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் அருகே உள்ள மேல்சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ், 47.
இவர் கடந்த மாதம் 28ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தகவல் தெரிந்தால் மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் 0413-2666356 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

