sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு கொண்டுவர நான் தயார்: வருவாயை பெருக்கவே மதுபான ஆலைகளுக்கு அனுமதி

/

புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு கொண்டுவர நான் தயார்: வருவாயை பெருக்கவே மதுபான ஆலைகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு கொண்டுவர நான் தயார்: வருவாயை பெருக்கவே மதுபான ஆலைகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு கொண்டுவர நான் தயார்: வருவாயை பெருக்கவே மதுபான ஆலைகளுக்கு அனுமதி


ADDED : மார் 14, 2025 04:16 AM

Google News

ADDED : மார் 14, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாநில வருவாயை பெருக்கவே புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி கொடுத்தார்.

புதுச்சேரியில் ஏற்கனவே மதுசேரியாக மாறிவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் பார்களாக உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் புதிதாக மதுபான தொழிற்சாலைகளுக்கு புதுச்சேரி அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதில் பல கோடி கைமாறியுள்ளது. இதில் சி.பி.ஐ., விசாரணை தேவை என காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் நேற்று சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பூதாகரமாக வெடித்தது.

தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் பேசுகையில், புதிய மதுபான ஆலை அனுமதி விவகாரத்தில் ஏன் இந்த மர்மம். புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டாதா? இல்லையா என்பதை மக்கள் மத்தியில் வெளியிட வேண்டும். மக்களுக்கு பதிப்பு என்றால் வேண்டாம். எதுவாக இருந்தாலும் மக்களிடம் சொல்லுங்கள் என்றார்.

இறுதியாக பேச வந்த முதல்வர் ரங்கசாமி எதிர்க்கட்சிகளின் மதுபான ஆலை அனுமதி குற்றச்சாட்டுகளுக்கு பதிலலித்தார்.

அவர், பேசியதாவது:

அனைவருக்கும் அரசு வேலை வேலைவாய்ப்பு ஏற்படுத்திட முடியாது. தனியார் நிறுவனத்திலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்பதற்காக தான் 6 மதுபான ஆலைகள் துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடி வருவாயும், 5 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தண்ணீரை உறிஞ்சாத, சுற்றுச்சூழலை பாதிக்காத நிலையில் தான் இந்த தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆனால் வெளியில் சிலர் இதனை எதிர்த்து அதிக அளவு தண்ணீர் உறிச்சப்படுகிறது என, சுவரொட்டி ஒட்டி வருகின்றனர். அவர்கள் எதற்காக அப்படி செய்கின்றனர் என, எல்லோருக்கும் தெரியும். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை கொண்டு வருகிறோம் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் ஸ்பிரிச்சுவலாக இருந்தாலும், ஸ்பிரிட்டில் தான் அதிக வருமானம் வருகிறது. அனைவரின் கருத்தையும் இப்போது நேரடியாகவே கேட்கின்றேன். புதுச்சேரியில் மதுவிலக்கு கொண்டு வரமுடியுமா என்று சொல்லுங்கள். பூரண மதுவிலக்கை கொண்டுவர நான் தயார். எம்.எல்.ஏ.,க்கள் நீங்கள் தயாரா. அது சாத்தியமற்றது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.






      Dinamalar
      Follow us