/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நான் தான் முதல்வர் வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திட்டவட்டம்
/
நான் தான் முதல்வர் வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திட்டவட்டம்
நான் தான் முதல்வர் வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திட்டவட்டம்
நான் தான் முதல்வர் வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திட்டவட்டம்
ADDED : டிச 17, 2025 05:26 AM

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளர் நான் தான் என, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் என்னை சந்திக்கும் இளைஞர்கள், படித்த, படிப்புக்கு வேலை இல்லை என்கின்றனர். இங்கு வேலை இல்லாததால், வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். இங்கு இடம் இருந்தும் தொழிற்சாலைகள், ஐ.டி., பார்க் இல்லை.
போதைப்பொருள், ரவுடிகள் அட்டூழியம் என புதுச்சேரியில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால் இங்கு முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர். சுற்றுலா வர வெளி மாநிலத்தவர் பயப்படுகின்றனர். புதுச்சேரியை முன்னேற்ற தொழிற்சாலை, ஐ.டி., பார்க், டவுன் ஷிப், ஸ்மார்ட் சிட்டி அகியவற்றை உருவாக்க வேண்டும்.
ஊழல், ரவுடியிசத்தினால் இங்கிருந்த கம்பெனிகள்வெளியே சென்றுள்ளன. போலி மருந்து, போலி மதுபானம் கம்பெனிகள் தான் அதிகம் உள்ளது. என் மீது நம்பிக்கை உள்ளதால், இளைஞர்கள் என்னிடம் வருகின்றனர். இங்குள்ள தலைவர்களுக்கு திட்டங்கள் இல்லை. அவர்கள் ஏதோ அரசியலுக்கு வந்துவிட்டோம். சூழ்நிலை கைதிகளாக பதவியை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் பயணிக்கின்றனர்.
மத்திய அரசிடம் இணைந்து செயல்படும் இந்த அரசு, மக்களுக்கு தேவையான எதையும் பெற்றுத்தராமல் உள்ளது.
முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., வளர்ந்து விடும் என்பதால், எதையும் செய்யாமல் உள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய கவர்னரிடம் கலந்து ஆலோசிக்காமல், பிரச்னை எனவும், ராஜினாமா செய்வதாக கூறுகிறார்.
சிங்கப்பூர் சென்று 188 ஆண்டு பழமையான நிறுவனத்தை சந்தித்தேன். அவர்கள் தான் சிங்கப்பூரை கட்டமைத்தவர்கள். அவர்கள் மூலம் எப்படி அடுக்குமாடி குடியிருப்பு, பொது போக்குவரத்து, வடிகால் வசதி, தொழிற்சாலை, ஐ.டி., பார்க், தீம் பார்க் போன்றவற்றை உருவாக்குவது என திட்டமிடுவோம். ஏ.எப்.டி., பாப்ஸ்கோ, பாசிக், இதையெல்லாம் மீண்டும் நடத்த முயற்சிப்போம்.
இப்போதுதான் கட்சியை துவங்கியுள்ளேன், யாருடன் கூட்டணி என்று பிறகு அறிவிப்பேன். பழைய கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பம் இல்லை.
எனது கட்சியில் சேருபவர்களில் குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு 'சீட்' கிடையாது. மக்களுடன் நல்ல இணக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே 'சீட்'.
பிற கட்சிகளை விமர்சிக்கும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. நான் வலது சாரியும் இல்லை, இடது சாரியும் இல்லை. நான் வளர்ச்சி சாரி. மக்கள் வளர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். அவர்கள் அடிப்படை தேவைகளை நாம் பூர்த்தி செய்யும் அளவிற்காவது பாடுபடவேண்டும்.
சுற்றுலா தளமான புதுச்சேரியில் வேலைவாய்ப்பை உருவாக்கி, வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது எளிது. தொழில் துவங்க வருபவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். போலி மருந்து விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ.,க்கு கொண்டு செல்வோம்.
நான் எதையும் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. வரும் தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நான் தான் முதல்வர் வேட்பாளர். இங்குள்ள அரசியல் தலைவர்களை விட நான் மக்களுடன் களத்தில் இருக்கிறேன். வேலை கேட்டும், பட்டா கேட்டும் முதல்வர் வீட்டிற்கு சென்றால், அவர் விபூதிதான் பூசுகிறார். இதுவரைக்கும், யாருக்கும், எதுவும் செய்யவில்லை என்றார்.

