ADDED : டிச 17, 2025 05:27 AM

புதுச்சேரி: இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தையொட்டி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு துாதரகம் எதிரே அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில், 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போரில், உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று, நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், அரசுச் செயலர் (செய்தி மற்றும் விளம்பரம்) தமுகமது அஹ்சன் அபித், கலெக்டர் குலோத்துங்கன், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
