sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரிக்கு நுழைய பாஸ்போர்ட் கட்டாயம்: அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... அட நம்புங்கப்பா...

/

புதுச்சேரிக்கு நுழைய பாஸ்போர்ட் கட்டாயம்: அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... அட நம்புங்கப்பா...

புதுச்சேரிக்கு நுழைய பாஸ்போர்ட் கட்டாயம்: அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... அட நம்புங்கப்பா...

புதுச்சேரிக்கு நுழைய பாஸ்போர்ட் கட்டாயம்: அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... அட நம்புங்கப்பா...


ADDED : அக் 25, 2025 11:09 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் இருந்து வெளிநாடு செ ல்ல இன்றைக்கு பாஸ்போர்ட், விசா எடுக்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் புதுச்சேரி வருவதற்கே பிற மாநிலங்களில் இருந்து பாஸ்போர்ட் எடுத்தால் தான் உள்ளே வர முடியும் என்ற நடைமுறை இருந்தது தெரியுமா... இது உண்மை தான்.

இந்தியாவின் பெரும்பாலம்பான பகுதிகளை ஆங்கிலேயேர்கள் ஆட்சி செய்தனர். புதுச்சேரி, மாகி, ஏனாம், காரைக்கால், சந்திரநாகூர் பகுதிகளை மட்டும் பிரெஞ்சியர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஆங்கிலேயேர்கள் - பிரெஞ்சியர்கள் எலியும், பூனையுமாகத் தான் இருந்தனர். அடிக்கடி போர் மேகங்களும் சூழ்ந்தன. ஆங்கிலேயேர்கள் புதுச்சேரியை பிடிப்பது, அதை எதிர்த்து பிரெஞ்சியர்கள் தாக்குதல் நடத்தி போர் புரிவதும், அதன் பிறகு பாரீசில் உடன்படிக்கை ஏற்பட்டு இழந்த பகுதிகளை திரும்பி பெறுவதுமாக இருந்தது.

இதனால் சர்வதேச நாடுகள் போன்றே புதுச்சேரியும், தமிழக எல்லை பகுதிகள் கருதப்பட்டன. புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பொருட்களை கொண்டு செல்லவும், அங்கிருந்து புதுச்சேரிக்கு பொருட்களை கொண்டு வரவும் சுங்க வரிகள் விதிக்கப்பட்டன. 1841லேயே ஒரு சுங்க வரி ஒப்பந்தம் மூலம் பிரெஞ்சிந்திய பகுதிகளில் இருந்து இந்திய பகுதிகளுக்குள் நுழையும் பொருட்களுக்கு சுங்க வரி வசூலிக்கப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள்...

முதலாம் உலக போரில் நேச நாடுகளாக பிரிட்டன், பிரான்ஸ் ஒரே அணியாக கைகோர்த்ததால், இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. கட்டுப்பாடுகள் தளர்ந்தன. 1947ல் இந்தியா பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலைப்பெற்ற பிறகு, பிரெஞ்சியர்களுக்கும், பிரிட்டீஷாருக்கும் இடையே இருந்த அந்த சுங்கவரி ஒப்பந்தம் 1949 காலவதியானது.

அதேவேளையில், 1949 ஏப்ரல் 1ம் தேதி முதல் புதுச்சேரியை வரியில்லாத துறைமுகமாக அறிவித்தனர். இதனால் தங்கம், வைரம், வெள்ளி, மது வகைகள் என இறக்குமதி ஆகி புதுச்சேரி துறைமுகம் முக்கியத்துவம் பெற துவங்கியது. பிற மாநில மக்களை பொறாமைப்பட வைத்தது.

இங்கு தான் சிக்கலும் எழுந்தது. கடத்தலும் பல மடங்காக பெருகியது. புதுச்சேரியில் இருந்து பொருட்களை கடத்திக்கொண்டு போய் இந்திய பகுதிகளிலும், தமிழக பகுதிகளில் அதிக விலைக்கு விற்க துவங்கினர்.

அதை கண்ட பிரெஞ்சியர் கள் ஒரு முடிவுக்கு வந்தனர். புதுச்சேரி மக்கள் அருகில் உள்ள தமிழ்நாட்டின் பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால், சர்வதேச எல்லைகளைக் கடப்பதைப் போலவே, முறையான அனுமதிச் சீட்டு எனும் பாஸ்போர்ட்டை பெற வேண்டும் என, உத்தரவிட்டனர்.

இதேபோல் தமிழகம் உள்பட பிற பகுதிகளை சேர்ந்தவர்களும் புதுச்சேரிக்கு நுழைவதாக இருந்தாலும் இந்த அனுமதி சீட்டு அவசியம் என அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் பிரெஞ்சு துணை துாதரிடம் விண்ணப்பித்த இந்த பாஸ்போர்ட் தரப்பட்டது.

அதன் பிறகு இந்த அதிகாரம் நகராட்சி மேயர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த அனுமதி சீட்டுடன் புதுச்சேரிக்கு உள்ளே வரும்போதும், மாநில எல்லையைவிட்டு வெளியே செல்லும் போதும் பிரெஞ்சு அரசின் முத்திரை போடப்பட்டது. 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அன்று உதித்த அதிகாலை ஆதவன் விடுதலை ஒளியை புதுச்சேரியில் பாய்ச்சியப்படுடியே வங்க கடலிலிருந்து மேலெழுந்தபோது, அனுமதி சீட்டு எனும் இந்த பாஸ்போர்ட் நடைமுறையும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

இந்த வரலாற்று நிகழ்வால், எங்களுக்கே பாஸ்போர்ட்டா... ஒரு காலத்தில் எல்லோருக்கும் பாஸ்போர்ட் கொடுத்தது நாங்க என்று புதுச்சேரிவாசிகள் பெருமையாகவே காலரை துாக்கி சொல்லிக்கொள்ளலாம். இப்ப சொல்லுங்க... புதுச்சேரி ஒரு குட்டி போன்சாய் மரம்போல் அங்குகொன்று இங்கொன்றுமாக பரவி இருந்தாலும் அதனுடைய வரலாற்று வீச்சு அதிகம் தானே....






      Dinamalar
      Follow us