/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நல்ல திட்டங்களுக்கு துணை நிற்பேன்' கவர்னர் தமிழிசை திட்டவட்டம்
/
'நல்ல திட்டங்களுக்கு துணை நிற்பேன்' கவர்னர் தமிழிசை திட்டவட்டம்
'நல்ல திட்டங்களுக்கு துணை நிற்பேன்' கவர்னர் தமிழிசை திட்டவட்டம்
'நல்ல திட்டங்களுக்கு துணை நிற்பேன்' கவர்னர் தமிழிசை திட்டவட்டம்
ADDED : ஜன 25, 2024 04:42 AM
புதுச்சேரி, : 'புதுச்சேரி அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்கள் அனைத்திற்கும் துணைநிற்பேன்' என, கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழாவில், பங்கேற்ற அவர், பேசியதாவது:
கடந்த 2015ல் துவங்கிய இத்திட்டம் நடுவே செயல்படுத்தாமல் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் லேப்டாப் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எப்போதும் படிக்க வேண்டும்.
வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு ஒப்புதல் உண்டு. தற்போது 24 மணி நேரமும் படிக்கலாம். லேப்டாப் பெற்ற மாணவர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டாக்டர்கள், அரசியல்வாதிகள், கவர்னர்களாக பார்க்கிறேன். லேப்டாப்பை சரியான இடைவெளியில் வைத்து படிக்க வேண்டும். கண்களை சிமிட்டிக்கொள்ள வேண்டும்.
லேப்டாப் மாணவர்களின் அறிவாற்றலையும், ஆரோக்கியத்தையும் பெருக்க வேண்டும். மாணவர்களுக்கு விரைவில் சிறுதானிய சத்துணவு வழங்கப்பட உள்ளது. புதுச்சேரி அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்கள் அனைத்திற்கும் துணைநிற்பேன்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.