/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் புது கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்டின் பேச்சு
/
புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் புது கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்டின் பேச்சு
புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் புது கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்டின் பேச்சு
புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் புது கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்டின் பேச்சு
ADDED : டிச 15, 2025 05:59 AM
புதுச்சேரி: பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவது என்னுடைய குறிகோள் என எல்.ஜே.,கே ., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசினார்.
புதுச்சேரி பாண்டி மெரினாவில் நடந்த லட்சிய ஜனநாயக கட்சி துவக்க விழாவில் அவர் பேசியதாவது:
புதுச்சேரி மக்களை வைத்து சம்பாதிக்க போவதாக சில புரளியை கிளப்புகின்றனர். எனக்கு மக்களை ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும் என்ற எந்த ஒரு நோக்கமும் அவசியமும் இல்லை.
புதுச்சேரி மக்கள் உறங்குவதற்கு இடம் இல்லை. உணவு பிரச்னை, குடிநீர் முறையாக விநியோகம் செய்ய முடியவில்லை. கழிவுநீர் கலந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 3 மாத குழந்தை டாக்டர் இல்லாததால் இறந்து உள்ளது. அனைத்தையும் தாண்டி மனிதர்கள் உயிரை காக்க வேண்டிய மருந்தில் கூட ஊழல் நடந்துள்ளது.
இங்குள்ள ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி இல்லை. சிண்டிகேட் வைத்து யாரும், யாரையும் கேள்வி கேட்பது இல்லை. அதனால், தான் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்து, அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைக்க வந்துள்ளோம். புதுச்சேரியை சிங்கப்பூராக மாத்தி காட்டனும், டென்மார்க் மாதிரி ஊழல் இல்லாதபடி காட்ட வேண்டும். அயர்லாந்து போன்று மகிழ்ச்சி குறியீட்டுடன் புதுச்சேரி மக்களை இருக்க செய்ய வேண்டும். பூட்டான் மாதிரி புதுச்சேரியை கார்பன் உமிழ் இல்லாத பசுமை நகரமாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்று நாங்கள் உங்கள் முன் நிற்க காரணம். புதுச்சேரியை உலக வரைபடத்தில் நம்பர்- 1 சிட்டியாக காட்ட வேண்டும் என்று ஐ.நா.,வில் குறிப்பிட்டு பேசினேன்.
நம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். புதுச்சேரியை நம்பர் 1 ஆக மாற்ற வேண்டும். அது மட்டுமே என்னுடைய எண்ணம்.. நம்மிடம் எல்லா வளமும் இருக்கிறது. கல்வி பயின்ற இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை இல்லாததால் தான் பாதை மாறி போகும் சூழ்நிலை வருகிறது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, நாம் ஒரு நல்ல ஆட்சியையும், மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்து, அவர்களின் அன்பும், ஆதரவும் மட்டுமே கேட்டு வந்துள்ளேன். வேறு ஏதுவும் எனக்கு வேண்டாம். நாம் வெற்றி பெற்று கண்டிப்பாக புதுச்சேரியை சிங்கபூராக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

