ADDED : ஜூலை 12, 2025 03:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் மரியா மார்டின் தலைமை தாங்கினார். ரோட்டரி பாண்டிச்சேரி மிட் டவுன் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
ஆசிரியர் ரீட்டா மேரி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கவிதா வரவேற்றார். ஆசிரியர் இந்திரா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.