ADDED : ஜூலை 30, 2025 07:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் :  கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி ஆரோ சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் கருணா கரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி ஆரோ சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பாக்கியராஜ், செயலாளர் ஹர்ஷந்த் கான், முன்னாள் தலைவர்கள் சிவராமச்சந்திரன், சந்திரலேகா ஆகியோர்  பள்ளிக்கு ஒலி பெருக்கி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டைகள், துண்டுகள் வழங்கினர். ஆசிரியை ஜோஸ்பின் எலிசபெத் நன்றி கூறினார்.

