தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அசோக் ஆனந்த் வெற்றி பெற்றால் மீண்டும் தொகுதி வளர்ச்சி பெறும் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு

அசோக் ஆனந்த் வெற்றி பெற்றால் மீண்டும் தொகுதி வளர்ச்சி பெறும் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு

அசோக் ஆனந்த் வெற்றி பெற்றால் மீண்டும் தொகுதி வளர்ச்சி பெறும் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு


ADDED : செப் 25, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து,  அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், வினோபா நகரில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். 

அப்போது, அவர் பேசுகையில், ‘தட்டாஞ்சாவடி தொகுதி இடை தேர்தலில், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நடப்பது இடைத்தேர்தல். இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. மக்கள் நலனில் அக்கறை கொண்ட  முதல்வர் ரங்கசாமி தலைமையில் நல்லாட்சி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. ஆளும் கூட்டணி சார்பில், போட்டியிடும் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றால்,  இத்தொகுதி மீண்டும் வளர்ச்சி பெறும். மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படும்.

விடற்ற ஏழைகளுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படும்.  பொய்யாகுளம் பகுதியில் அடுக்குமாடி வீடு கட்டப்படும். பட்ஜெட்டில் அறிவித்த 21 ஏக்கரில் ஐ.டி., பார்க் அமைக்கப்படும். அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, தி.மு.க., காங்., கூட்டணி ஆட்சி சதி செய்து, அவரது பதவியை ரத்து செய்தனர். தற்போது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் தான் நிரபராதி என வெற்றி பெற்று இத்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,வாக இருந்த போதும், இல்லாத காலத்திலும் இத்தொகுதி மக்களின் நலனில் அக்கறையுடன் இருப்பார்.

நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற வைத்த உருளையன்பேட்டை மக்களை அனாதையாக விட்டு விட்டு வில்லியனுார் சென்ற தி.மு.க.,அமைப்பாளர் சிவா, முதல்வரை பார்த்து, ஏன் தட்டஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார் என கேள்வி கேட்கிறார்.

காங்., வேட்பாளருக்கு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி எப்போது பிரசாரம் செய்ய வந்தாரோ அப்போதே எங்கள் வேட்பாளரின் வெற்றி உறுதியாகி விட்டது. 

ஐந்தாண்டு காலம் இருண்ட ஆட்சியை வழங்கிய நாராயணசாமியை நம் மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் ஒவ்வொரு இடைத்தேர்தலின் போதும் புதுச்சேரிக்கு வருவார். எதையாவது புதுப்புது பொய் கருத்துக்களை கூறி விட்டுச் செல்வார். அவரது கருத்துக்களை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us