/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நரசிங்கா பாதம் பணிந்தால் ஓடி வந்து அருள்வான்' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
'நரசிங்கா பாதம் பணிந்தால் ஓடி வந்து அருள்வான்' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'நரசிங்கா பாதம் பணிந்தால் ஓடி வந்து அருள்வான்' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'நரசிங்கா பாதம் பணிந்தால் ஓடி வந்து அருள்வான்' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 09, 2024 07:11 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் திருப்பாவையின் 23ம் பாசுரம் குறித்து நேற்று அவர் உபன்யாசம் செய்ததாவது:
திருப்பாவையின் 23ம் பாசுரம் எம்பெருமானின் கருணையையும், கம்பீ ரத்தையும் போற்றிப் புகழ்வதாக அமைந்துள்ளது. இந்தப் பாசுரத்தில் மாயக் கண்ணன் துயிலெழுந்து வரும் அழகை, தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் விழித்தெழுந்து வருவதுடன் ஒப்பிட்டு ரசிக்கிறாள் ஆண்டாள்.
மாரிக்காலம் முடிந்ததால், மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்த சிங்கமும் அறிவுற்றுத் தீ விழித்தது.
அதாவது யாரும் எழுப்ப வேண்டாமல் தானாகவே காலம் உணர்ந்து, பூ மலர்வது போல கண் விழித்ததாம்.
இது கானக சிம்மத்தின் இயல்பு. நம் யாதவ சிம்மமோ, ஆண்டாளின் காதல் கனிய, அவள் வேண்டுகோளை ஏற்று கண் மலர்ந்தது, சீரிய சிங்காசனம் ஏறி அருள் பாலிக்க வந்தது.
இப்பாசுரத்தில், விழித்தெழும் பரமனின் கம்பீரத்தையும், அவன் வீறு நடையையும் விழித்தெழுந்து வரும் சிங்கத்தின் நடையோடு ஒப்பிட்டுள்ளதில் ஆண்டாளின் கவிநயம் மிக அழகாக வெளிப்படுகிறது.
போதருமா போலே என்பது அருமையான விஞ்ஞான தத்துவம் உள்ளடக்கியுள்ளது. போதறுமாப் போலே என்பது இப்படிப்பட்ட, முழுமைக்கும், இல்லாமைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை.
இதைத்தான், பின்னாளில் 300 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கணிதவியல் தத்துவத்தை, எளிய தமிழில், மெய்ஞானத்தில் போதறுமாப் போலே என்று வெகு இயல்பாகச் சொல்லி விட்டாள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பாசுரத்தின் உள்ளுரைப் பொருளாகப் போற்றிப் பாடப்பட்டுள்ள நரசிம்மப் பிரானை ஆடி ஆடி அகம் கரைந்து, கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்கா நரசிங்கா என்று வாடி அவன் பாதம் பணிந்தால் அவன் ஓடோடி வந்து அருள்வான் என்பது திண்ணம். இவ்வாறு அவர் உயன்பாசம் செய்தார்.