/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்ட விரோதமாக அதிகரித்துள்ள தங்கும் விடுதிகள் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு
/
சட்ட விரோதமாக அதிகரித்துள்ள தங்கும் விடுதிகள் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு
சட்ட விரோதமாக அதிகரித்துள்ள தங்கும் விடுதிகள் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு
சட்ட விரோதமாக அதிகரித்துள்ள தங்கும் விடுதிகள் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு
ADDED : பிப் 09, 2024 05:36 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்ட விரோதமாக அதிகரித்துள்ள ேஹாம்ஸ்டே தங்கும் விடுதிகளால் அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டிற்கு 70 ஆயிரம் வெளிநாட்டினர் உட்பட 12 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டல் ரூம் வசதிகள் புதுச்சேரியில் போதுமானதாக இல்லை.
மாநிலத்தில் 350 கெஸ்ட் ஹவுஸ்களில் 7,476 ரூம்கள் உள்ளன. இவற்றில் 5,543 ரூம்களில் ஏசி வசதி, 1,933 ரூம்களில் ஏசி வசதி இல்லை. இதனையடுத்து பெட் அண்ட் பிரேக்பாஸ்ட் என்ற பெயரில் சுற்றுலா துறை ேஹாம் ஸ்டே திட்டத்தை கடந்த 2019ல் துவக்கியது. வீடுகளாக உள்ளவை தங்கும் விடுதிகளாக மாற்றலாம் என, அரசு அறிவித்தது.
அதன்படி, ேஹாம்ஸ்டே விடுதிகளாக வீடுகளை மாற்ற 64 பேர் விண்ணப்பித்தனர். 33 பேருக்கு அனுமதி தரப்பட்டது.
ஆனால், இதனையே சாக்காக வைத்துக்கொண்டு அனுமதியில்லாமல் மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கடற்கரை, புல் வார்டு மற்றும் நகரப் பகுதியை சுற்றி பல சிறிய விடுதிகள் அனுமதி இன்றி செயல்பட்டு வருகின்றன.
சராசரியாக தினசரி ஒரு இரவுக்கு தங்குமிடங்களில் 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இப்படி மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதிக் கின்றனர். ஆனால் அரசுக்கு ஒரு பைசா கூட வரி கட்டுவதில்லை.
சட்ட விரோதம்
விடுதிகள், ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் ஈடுபடுபவர்கள் உள்ளூர் நிர்வாகமான உள்ளாட்சி அமைப்பு, காவல்துறை, சுற்றுலா, தீயணைப்பு, தொழிலாளர் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறைகளில் முறையாக அனுமதி பெற வேண்டும். எந்த அனுமதியும் இல்லாமல் தங்கும் விடுதிகள் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வருகின்றன.
வர்த்தக உரிமம் இல்லை
வீடுகள் தங்கும் இடங்களாக மாற்றப்படும்போது அவை வர்த்த உரிமத்தில் கீழ் தான் இயங்க வேண்டும். ஆனால் ேஹாம்ஸ்டே தங்கு விடுதிகள் வர்த்தக உரிமத்தில் இல்லாமல் சாதாரண வீடுபோல் இயங்கி வருகின்றன.
இதேபோல் வீடுகள் தங்கும் இடங்களாக மாற்றப்படும்போது, வர்த்தகத்திற்கான மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
ஆனால் இவர்களுக்கு வீடுகளுக்கான மின்கட்டணம், குடிநீர் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இதனால், மின் துறை, பொதுப்பணித் துறைக்கு லட்சணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வீடுகளை தங்கும் இடங்களாக மாற்றும்போது, வர்த்தக நிறுவனங்களுக்கான சொத்து வரியை நகராட்சி வசூலிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு வீடுகளுக்கான சொத்து வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வருவாய் இழப்பு மட்டுமின்றி பதிவு செய்யப்படாத விடுதிகளால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லகின்றனர்.
இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நள்ளிரவு வரை பாடல்களை அலறவிட்டு அக்கம்பக்கத்தினர் துாக்கத்தை கெடுக்கின்றனர். இரவில் அறிமுகமில்லாத நபர்களின் நடமாட்டம் அதிகரித்து, அச்சத்தை ஏற்படுத்துகிறது என, குடியிருப்பு வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சாதாரண மக்கள் சில ஆயிரம் மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி செலுத்தாவிட்டால் உடனே அதிகாரிகள், ஊழியர்களோடு புறப்பட்டு துரித நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் அனுமதியில்லாமல் அரசுக்கு லட்சணக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் ேஹாம்ஸ்டே விடுதிகளிடம் வரி வசூலிப்பதில்லை.
ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாமல் நகராட்சிகள் திணறுகின்றன. மறுபுறம் கண்ணுக்கு தெரியும் வரி வருவாயை வசூலிக்காமல் நகராட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன.
தங்கு விடுதிகளுக்கு சொத்து வரி, சேவை வரி, வர்த்த உரிமம் என முக்கிய வரிகளை நகராட்சி தான் வசூலிக்க வேண்டும். நிதி நெருக்கடி என்று இனியும் சொல்லிக்கொண்டு இருக்காமல், இதுபோன்று ேஹாம்ஸ்டேவை கணக்கெடுத்து, வரியை வசூலித் தால், அனைத்து ஊழியர்களுக்கும் அரசின் நிதியுதவியை எதிர்பார்க்காமல் நகராட்சிகள் சம்பளம் போட்டுவிடலாம்.

