/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கள்ளத்தனமாக விற்ற மதுபானங்கள் பறிமுதல்
/
கள்ளத்தனமாக விற்ற மதுபானங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 11, 2025 04:14 AM

புதுச்சேரி: மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 29 லிட்டர் சாராயம், 130 லிட்டர் மதுபானங்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி கலால் துறை மூலம் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மதுபானம்,சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இதனை பயன்படுத்தி கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப்படி, கலால் துறை தாசில்தார் ராஜேஸ் கண்ணா, துணை தாசில்தார்கள் பாலமுருகன், ஜவஹர், சம்பத் தலைமையிலும், வருவாய் ஆய்வாளர்கள் அடக்கிய 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது.
பறக்கும் படையினர் புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை, அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனுர் மற்றும் மண்ணாடிபட்டு பகுதிகள் முழுதும் தீவிரமாக சோதனை செய்தனர்.
அதில், திருக்கனுார், மேட்டுப்பாளையம், தவளக்குப்பம், இடையார் பாளையம் மற்றும் மடுகரை ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனைசெய்த 4 பேரை பிடித்து, அவர்களிடம் இருந்து 29 லிட்டர் சாராயம் மற்றும்130 லிட்டர்மதுபானங்கள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 51 ஆயிரத்து 859 ரூபாய் ஆகும். அவர்கள் மீது கலால் விதிகளின்படி நடவடிக்கைஎடுக்கப்பட்டது.

