மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 14 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 14 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ADDED : நவ 07, 2026 06:15 PM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று (நவ.,7) நடந்த மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் கொடுத்த 14 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்தினார். அதே போன்று, லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., ராகவ், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில், எஸ்.பி.,க்கள் திவ்யா, ரச்னா சிங், பக்தவச்சலம், நித்யா, தனசேகரன் ஆகியோர் பொதுமக்களின் மனுக்கள் மீது விசாரணை செய்தனர்.
மேலும், காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அனுராக் சோப்ரா, அரியாங்குப்பத்தில், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், ஏனாமில் எஸ்.பி.,வரதராஜன், மாகியில் எஸ்.பி., தனசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மக்கள் மன்றத்தில், பொதுமக்கள் கொடுத்த 26 மனுக்களில் 14 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
