தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு

மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு

மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு


ADDED : நவ 21, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 06:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று (நவ.,21) நடந்த மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் கொடுத்த 18 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ராகவ் தலைமையில் இன்று மக்கள் மன்றம் நடந்தது. இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் உட்பட சப் இன்ஸ்பெக்டர், போலீசார் கலந்து கொண்டனர். மக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது எஸ்.பி., விசாரணை நடத்தினார்.

அதே போன்று, ஏனாம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா பொதுமக்கள் கொடுத்த மனு மீது விசாரணை நடத்தினார். மாகியில் இன்ஸ்பெக்டர் அனில்குமார், காரைக்கால் நெடுங்காடு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமு, நிரவி போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளர் லெனின்பாரதி புகார் மனுக்களை விசாரணை செய்தனர்.

மக்கள் கொடுத்த 23 புகார் மனுக்களில் 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us