/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 26 புகார்களுக்கு உடனடி தீர்வு
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 26 புகார்களுக்கு உடனடி தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 26 புகார்களுக்கு உடனடி தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 26 புகார்களுக்கு உடனடி தீர்வு
ADDED : மார் 08, 2026 04:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நடந்த மக்கள் மன்றத்தில் 26 புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என, அனைத்துப் பகுதிகளிலும் சீனியர் எஸ்.பி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் நேரடியாக போலீஸ் நிலையங்களுக்குச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டனர்.
வில்லியனுார் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோர் புகார்களைப் பெற்றனர்.
பெரியக்கடையில் எஸ்.பி., ஸ்ருதி யாரகட்டி, ரெட்டியார்பாளையத்தில் எஸ்.பி., வம்சித ரெட்டி, தவளக்குப்பத்தில் சிந்தா கோதண்டராமன், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.பி., ராகவ், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.பி., திவ்யா, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, மாகியில் எஸ்.பி., வினய் குமார் கட்ஜ், ஏனாமில் எஸ்.பி., வரதராஜன் ஆகியோர் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
நேற்று நடந்த கூட்டங்களில் மொத்தம் 43 பெண்கள் உட்பட 189 பேர் கலந்துகொண்டனர். பெறப்பட்ட 64 புகார்களில், 26 புகார்களுக்கு அந்த இடத்திலேயே உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அந்தந்த போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இனி தங்கள் புகார்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வரும் காலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மூத்த அதிகாரிகள் காவல் நிலையங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பார்கள் என, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்தார்.

