தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் மன்றம் நிகழ்ச்சி 27 புகார்களுக்கு உடனடி தீர்வு

மக்கள் மன்றம் நிகழ்ச்சி 27 புகார்களுக்கு உடனடி தீர்வு

மக்கள் மன்றம் நிகழ்ச்சி 27 புகார்களுக்கு உடனடி தீர்வு


ADDED : அக் 12, 2025 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2025 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில், நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி யில், மேற்கு எஸ்.பி., சுப்ரமணியன், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் மேற்கு எஸ்.பி., சுப்ரமணி யன் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டார்.

இன்ஸ்பெக்டர் ராஜகுமார், கலைசெல்வன், கீர்த்திவர்மன், சாந்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, தமிழரசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

இதேபோல், பெரியக் கடையில் கிழக்கு எஸ்.பி., ஸ்ருதி, தவளக்குப்பத்தில் தெற்கு எஸ்.பி., செல்வம், டி.நகரில் எஸ்.பி., ரகுநாயகம், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., பக்தவசலம் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 37 புகார்கள் பெறப்பட்டு, 27 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு, எஸ்.பி.,க் கள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us