sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 விபத்து வழக்கில் ஆள்மாறாட்டம்: சரணடைந்தவர் மீது வழக்கு பதிவு

/

 விபத்து வழக்கில் ஆள்மாறாட்டம்: சரணடைந்தவர் மீது வழக்கு பதிவு

 விபத்து வழக்கில் ஆள்மாறாட்டம்: சரணடைந்தவர் மீது வழக்கு பதிவு

 விபத்து வழக்கில் ஆள்மாறாட்டம்: சரணடைந்தவர் மீது வழக்கு பதிவு


ADDED : பிப் 27, 2026 04:59 AM

Google News

ADDED : பிப் 27, 2026 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் விபத்து ஏற்படுத்திய காரின் டிரைவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சரண் அடைந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், புதிய பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத கார் ஒன்று, கடந்த 15ம் தேதி அவ்வழியாக சென்ற பைக், நடந்து சென்ற 2 நபர்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது, விபத்து ஏற்படுத்தி கார், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த அசோகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அசோகனை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, விபத்து நடந்ததை ஒப்புகொண்டு, விபத்து ஏற்படுத்தி காரின் டிரைவரை போலீசில் சரண் அடைய செய்வதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து, சீர்காழி, பிடாரி கீழத்தெருவை சேர்ந்த ஜெகநாதன், 31; என்பவர் விபத்து ஏற்படுத்தியதாக போக்குவரத்து போலீசில் நேற்று முன்தினம் காலை சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஜெகநாதன் விபத்து ஏற்படுத்தவில்லை என்பதும், வேறு ஒருவர் ஏற்படுத்திய விபத்திற்கு ஆள்மாறாட்டம் செய்து சரண் அடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போக்குவரத்து போலீஸ் சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், நகர சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஜெகநாதன் மீது புகார் அளித்தார்.அதன் பேரில், ஜெகநாதன் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us