/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நான்கு பிராந்தியங்களிலும் நாளை போராட்டம் மின்துறை கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
/
நான்கு பிராந்தியங்களிலும் நாளை போராட்டம் மின்துறை கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
நான்கு பிராந்தியங்களிலும் நாளை போராட்டம் மின்துறை கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
நான்கு பிராந்தியங்களிலும் நாளை போராட்டம் மின்துறை கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
ADDED : பிப் 18, 2025 06:26 AM
புதுச்சேரி: புதுச்சேரி மின் துறையில், பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி, நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
இது குறித்து, புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள மற்றும் தொழிலாளர்கள் நல சங்க கூட்டு நடவடிக்கை குழு பொது செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:
புதுச்சேரி அரசு மின் துறையை தனியார்மயபடுத்துகின்ற காரணத்தை கூறி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் காலம் கடத்தி வருகின்றனர். 2 ஆயிரம் ஊழியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 1,100 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், ஊழியர்களுக்கு கூடுதல் பணிசுமை ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் மின் இணைப்புகள் அதிகரித்து வருகின்றது. அதற்கு ஏற்ப பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.
இதேபோல், மின் துறையில் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக பதவி உயர்வு எட்டாக் கனியாகவே உள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே பதவியில், ஒருவர் பதவி உயர்வு இன்றி பணி புரிந்து ஓய்வு பெறும், அவலநிலையும் மின் துறையில் நீடித்து வருகின்றது.
எனவே, மின் துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வலியுறுத்தி, நாளை (19ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள தலைமை மின் அலுவலகங்களில், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பணிகள் பாதிக்கும்...
மின்துறை ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர், ஒரே நேரத்தில், காலை முதல் மாலை வரை 19 ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளதால், மின் துறையின் பல்வேறு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மின் பழுது பார்த்தல், மின் வசூல் பணிகள் பாதிக்கும்.

