/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாண்டில் முள் வளைவு அமைக்க கோரி இ.சி.ஆரில்., மீனவர்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
துாண்டில் முள் வளைவு அமைக்க கோரி இ.சி.ஆரில்., மீனவர்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
துாண்டில் முள் வளைவு அமைக்க கோரி இ.சி.ஆரில்., மீனவர்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
துாண்டில் முள் வளைவு அமைக்க கோரி இ.சி.ஆரில்., மீனவர்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 25, 2024 04:14 AM

புதுச்சேரி : துாண்டில் முள்வளைவு அமைக்க வலியுறுத்தி காலாப்பட்டு இ.சி.ஆரில்., மீனவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் முதல் கனகசெட்டிகுளம் வரையிலான கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் கடற்கரையில் தமிழக அரசு சார்பில் கருங்கள் கொட்டி துாண்டில் முள் வளைவு அமைத்துள்ளனர். அதனால் தமிழக பகுதியை ஒட்டியுள்ள பிள்ளைச்சாவடி, பெரிய காலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு கடற்கரையில் கடல் அரிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.
மீனவர் வீடுகள், தென்னை மரங்கள், மீன்பிடி கூடங்கள், சாலைகள் கடலில் அடித்து செல்லப்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க கடந்த பிப்., மாதம் ரூ. 25 கோடி மதிப்பில் துாண்டில் முள்வளைவு அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
தேர்தல் காரணமாக இப்பணி நிறுத்தப்பட்டது . அதன்பின்பு, பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம் பகுதியில் தலா ரூ. 6.35 கோடி மதிப்பில் 4 கிராமத்தில் தனித்தனியாக 4 துாண்டில் முள் வளைவு அமைக்க பொதுப்பணித்துறை மீண்டும் டெண்டர் விட்டது.
டெண்டரை எடுக்க யாரும் முன்வரவில்லை. துாண்டில் முள் வளைவு அமைக்க கோரி, சின்னகாலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட மீனவ மக்கள் நேற்று காலை 9:00 மணிக்கு காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால் இ.சி.ஆரில்., நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தது.
சப்கலெக்டர் அர்ஜூன்ராமக்கிருஷ்ணன், தாசில்தார் ராஜேஷ்கண்ணா, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,வும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இறுதியில் டெண்டர் எடுக்கும் காலக்கெடுவை 27 ம் தேதி வரை நீட்டித்துள்ளதாகவும், அதில் யாரும் பங்கேற்கவில்லை எனில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நிதியின் கீழ் கல் கொட்டும் பணியை துவங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.