/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளேவா... வெளியேவா... குழப்பத்தில் என்.ஆர்.காங்.,
/
உள்ளேவா... வெளியேவா... குழப்பத்தில் என்.ஆர்.காங்.,
உள்ளேவா... வெளியேவா... குழப்பத்தில் என்.ஆர்.காங்.,
உள்ளேவா... வெளியேவா... குழப்பத்தில் என்.ஆர்.காங்.,
ADDED : டிச 21, 2025 03:47 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் தொடரலாமா அல்லது த.வெ.க., வுடன் கூட்டணி அமைக்கலாமா என, என்.ஆர்.காங்., குழப்பத்தில் உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரியில் சமீபத்தில் துவங்கிய சிறு கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறது. ஆனால் புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.,காங்., கட்சி, தேர்தல் குறித்து என்ன பணியை செய்து வருகிறது என்பது அக்கட்சியினருக்கே விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
தற்போதுள்ள பா.ஜ., வுடன் கூட்டணியை தொடர்வாரா அல்லது வாரந்தோறும் தன்னை சந்தித்து, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் பூஜை செய்த எலுமிச்சை பழத்தை வாங்கி செல்லும் புஸ்சி ஆனந்தின் வற்புறுத்தலால் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பாரா என்பது தெரியாமல் உள்ளது.
இந்நிலையில் த.வெ.க., வுடன் முதல்வர் கூட்டணி அமைக்கலாம் என்று நினைத்தாலும் தேர்தலுக்கு தேவைப்படும் 'ப' வைட்டமினை அக்கட்சி அளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதே நேரத்தில், மத்தியில் பா.ஜ., ஆட்சியில் உள்ளதால் அதன் ஆதரவு இல்லாமல் புதுச்சேரியில் ஆட்சி செய்வது, கத்தி மீது நடப்பதற்கு சமமானது. இதற்கு எடுத்துக்காட்டு மாஜி முதல்வர் நாராயணசாமியின் ஆட்சியில் அவர் கவர்னர் கிரண் பேடியுடன் பட்ட பாட்டை வார்த்தையால் சொல்லி மாளாது.
அதனால், பா.ஜ., கூட்டணியை விட்டு முதல்வர் வெளியேற மாட்டார் என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பது வரும் புத்தாண்டில் தெரிந்துவிடும்.

