/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரையில் ரூ. 1.33 கோடியில் இணைப்பு சாலை பணி துவக்கம்
/
உழவர்கரையில் ரூ. 1.33 கோடியில் இணைப்பு சாலை பணி துவக்கம்
உழவர்கரையில் ரூ. 1.33 கோடியில் இணைப்பு சாலை பணி துவக்கம்
உழவர்கரையில் ரூ. 1.33 கோடியில் இணைப்பு சாலை பணி துவக்கம்
ADDED : மார் 01, 2024 03:22 AM

புதுச்சேரி: உழவர்கரை மற்றும் மூலக்குளத்தில் இருந்து பைபாஸ் சாலையை இணைக்கும் இணைப்புச் சாலைகளை ரூ. 1.33 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி நேற்று துவங்கப்பட்டது.
உழவர்கரை தொகுதியில், புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், உழவர்கரையில் இருந்து துவங்கி வயல்வெளி நகர், வின்சென்ட் வீதி வழியாக புறவழிச்சாலையை இணைக்கும் சாலையை ரூ. 69 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி, மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் நுழைவு வாயிலில் இருந்து மதுராபேட் வரையிலான இணைப்பு சாலையை ரூ. 64 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.
சிவசங்கர் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், மத்திய கோட்ட கட்டடம் மற்றும் சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனு திருஞானம், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலைப் பொறியாளர் முருகன், ஒப்பந்ததாரர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.