/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மகளிர் கல்லுாரியில் முத்தமிழ் மன்ற துவக்க விழா
/
அரசு மகளிர் கல்லுாரியில் முத்தமிழ் மன்ற துவக்க விழா
அரசு மகளிர் கல்லுாரியில் முத்தமிழ் மன்ற துவக்க விழா
அரசு மகளிர் கல்லுாரியில் முத்தமிழ் மன்ற துவக்க விழா
ADDED : அக் 09, 2024 05:22 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மகளிர் கல்லுாரியில் நடந்த முத்தமிழ் மன்ற துவக்க விழாவில், மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி யில், முத்தமிழ் மன்றம் துவக்க விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில், தமிழ்த்துறை உதவி பேராசிரியை மாதரசி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் சேதுபதி நோக்க உரையாற்றினார். கல்லுாரி முதல்வர் வீர மோகன் தலைமை தாங்கிப் பேசினார்.
தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலை அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன், 'தன்னம்பிக்கை தமிழ்' எனும் தலைப்பில், சிறப்புரையாற்றினார்.
இதில், தமிழ்த்துறை மாணவியர் தொகுப்புரை வழங்கினர். இளங்கலை மாணவி கிரண்யா நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியை தமிழ்த்துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.