ADDED : ஜன 29, 2025 05:30 AM

புதுச்சேரி : புதுச்சேரி துாய இதய மரியன்னையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபையின் துப்புயி ஆய்வு மைய அறிமுக விழா மற்றும் கருத்தரங்கம் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
சபை தலைமை அன்னை ஜெயாமேரி தலைமை தாங்கினார். மாநிலத் தலைமை அன்னை டாரியாமேரி ஜோஸ்பின் செல்வராணி வரவேற்றார். அருட்தந்தை ஜோனாஸ் ஜெபித்தார்.
துப்புயி அடிகளாரின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அருட்சகோதரி ஜெயாமேரி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். அருட்தந்தை அந்தோணிசாமி, பேராசிரியர் ராஜா துப்புயி அடிகளாரின் நுால்களில் கலாசாரப் பின்புலம் என்ற தலைப்பில் பேசினர்.
முனைவர் கிளமென்ட் லுார்து பல்கலைக்கழக ஆய்வுகளில் துப்புயி அடிகளாரின் தாக்கம் என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் ராமதாஸ் புதுச்சேரியின் கல்விக்கு துப்புயி அடிகளாரின் பங்களிப்பு, முனைவர் ஜான்போஸ்கோ துப்புயி அடிகளாரின் நுால்கள் ஆய்வுகளுக்கு ஓர் சுரங்கம் என்னும் தலைப்பில் பேசினர்.
முனைவர் லட்சுமி தத்தை உத்தியானம் காட்டும் வாழ்வியல் தத்துவங்கள் தலைப்பில் பேசினார். தமிழ்மாமணி துரைமாலிரையன், தமிழ்மாமணி முகமது உசேன், அருட்தந்தை பால்ராஜ், முனைவர் பாஞ்சு ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். கல்லுாரி முதல்வர் பாத்திமா தொகுத்து வழங்கினார்.
அருட்சகோதரி லிட்டில் பிளவர் தெரேசா நன்றி கூறினார்.

