/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருமான வரி ஊழியர்கள் சம்மேளன துவக்க நாள் விழா
/
வருமான வரி ஊழியர்கள் சம்மேளன துவக்க நாள் விழா
ADDED : பிப் 13, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72-வது துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது.
முத்தியால்பேட்டை வருமான வரித் துறை அலுவலகத்தில் வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72-வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.
வருமான வரி அதிகாரி கணேசன்,சம்மேளனத்தின் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வருமான வரி ஊழியர்கள் சம்மேளனம் புதுச்சேரி கிளை தலைவர் குரு ராகவேந்தர்,செயலாளர் அகிலன்,பொருளாளர் சுரேஷ் உரையாற்றினர். தேசிகன் நன்றி கூறினார்.