ADDED : ஜன 29, 2024 04:12 AM

புதுச்சேர : ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 4 இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி எஸ்.வி. பட்டேல் சாலை ஓட்டல் சற்குரு மற்றும் அதிதி ஓட்டல் அருகே புதிய ஆட்டோ ஸ்டாண்டு பெயர் பலகை திறப்பு விழாவிற்கு,தொ.மு.ச., தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார், சம்பத் எம்.எல்.ஏ., தொகுதி செயலாளர் சக்திவேல், பொதுகுழு உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., அமைப்பாளர் சிவா புதிய ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகையை திறந்து வைத்து, சீருடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தொகுதி செயலாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து வள்ளலார் சாலை அமித்தி ஓட்டல் மற்றும் காமராஜர் சாலையில் புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
எதிர்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் திறந்து வைத்து ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.