/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் துவக்க விழா
/
முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் துவக்க விழா
ADDED : மார் 11, 2024 04:37 AM

புதுச்சேரி, : புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் துவக்க விழா ரெட்டியார்பாளையத்தில் நடந்தது.
சங்கத்தின் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். ரெட்டியார்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரரும், தொழிலதிபருமான வெங்கடாஜலபதி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். உபதலைவர் கந்தசாமி, பொதுச் செயலாளர் செல்வமணி, அமைப்பு செயலாளர் ஜீவானந்தம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராமமூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

