/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில் வர்த்தக கண்காட்சி நமச்சிவாயம் துவக்கி வைப்பு
/
தொழில் வர்த்தக கண்காட்சி நமச்சிவாயம் துவக்கி வைப்பு
தொழில் வர்த்தக கண்காட்சி நமச்சிவாயம் துவக்கி வைப்பு
தொழில் வர்த்தக கண்காட்சி நமச்சிவாயம் துவக்கி வைப்பு
ADDED : பிப் 16, 2024 07:13 AM

புதுச்சேரி : தொழில் வர்த்தகக் கண்காட்சியை, அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
சிறு தொழில் நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வர்த்தகக் கண்காட்சிக்கு ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அலுவலகமும், புதுச்சேரி தொழில் வணிகத் துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் பார்வையிட்டார்.
விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அலுவலகத்தின் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். பா.ஜ., தொழில் பிரிவின் தலைவர் செல்வக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொழில் வர்த்தக கண்காட்சி இன்று நிறைவடைகிறது. சிறுதொழில் துவங்க முயற்சி மேற்கொண்டுள்ளவர்கள், வங்கிக் கடன் உதவியுடன் தொழில் துவங்க விரும்பும் தொழில் முனைவோர்கள், பட்டதாரிகள் கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறலாம்.