/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
/
மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
ADDED : மார் 18, 2024 03:43 AM
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிேஷக விழா, வரும் 21ம் துவங்கி 5 நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிேஷக விழா, வரும் 21ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. இதில், 21ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. 22ம் தேதி காலை 9:00 மணிக்கு 27 நட்சத்திரங்களில் கோமாதா பூஜையும், 23ம் தேதி காலை 7:30 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனையும் நடக்கிறது.
தொடர்ந்து, 24ம் தேதி முதல் கால யாகசலை பூஜை, பூர்ணாஹூதி நிகழ்ச்சியும், 25ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாகசாலை பூஜையை அடுத்து, மணக்குள விநாயகருக்கு 1008 கலசாபி ேஷகம், மற்றும் சங்காபி ேஷகம் நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு உற்சவமூர்த்தி வீதியுலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

